பிரபல எருதுச் சிலையை வடிவமைத்தவர் மரணம்

அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தின் வோல் ஸ்ட்ரீட்டில் உள்ள பிரபலமான எருதுச் சிலையை வடிவமைத்த சிற்பி தனது 80ஆவது வயதில் காலமானார்.

சார்ஜிங் புல் என்று அழைக்கப்படும் அந்தச் சிலையை ஆர்ட்டுரோ டி மோடிகா வடிவமைத்தார். இத்தாலியிலிருந்து 1973ஆம் ஆண்டு நியூயோர்க் வந்த ஆர்ட்டுரோ சிலைகளைச் செதுக்குவதில் வல்லவர்.

1987ஆம் ஆண்டு பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து அதிலிருந்து எப்படி அமெரிக்கா மீண்டுவந்தது என்பதைக் குறிக்கும் விதமாக எருதுச் சிலையை அவர் உருவாக்கினார்.

தனது சொந்தச் செலவில் 464,000 வெள்ளி மதிப்பிலான அந்த வெண்கலச் சிலையை அவர் வடிமைத்தார்.

சிலையை அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் தனது நண்பர்களுடன் இரவுநேரத்தில் யாருக்கும் தெரியாமல் வோல் ஸ்ட்ரீட்டில் வைத்தார் ஆர்ட்டுரோ. அதன் பின்னர் உலகமே அந்தச் சிலையைக் கண்டு மெய் மறந்தது.  

Mon, 02/22/2021 - 21:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை