ஐ.நா. அமைதிகாக்கும் படையினரால் தேசிய சுதந்திர தின கொண்டாட்டம்

இலங்கையின் 73வது தேசிய சுதந்திர தினமான பெப்ரவரி 04 ஆம் திகதியன்று, லெபனானில் உள்ள ஐ.நா. அமைதிகாக்கும் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின நிகழ்வுகளானது, லெபனான் அமைதிகாக்கும் படைத் தளத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்ட ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையின் இலங்கை குழு தளபதி லெப்டினன் கேணல் சுஜீவ பட்டகல படைமுகாமில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

மேலும், தேசிய கீதம் பாடல், அங்கு உயிர் நீத்த போர்வீரர்களை நினைவு கூர்ந்து 2 நிமிட மௌனஞ்சலி செலுத்தல் மற்றும் 73 வது சுதந்திர தின விழாவுக்கான இராணுவத் தளபதியின் விஷேட செய்தியும் வாசித்தல் உள்ளிட்டநிகழ்வுகள் நடைபெற்றன.

ஐக்கிய நாடுகளின் இடை நிலை படையின் பிரதி படைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் அயிட்டி ஆர்யீட்டி இலங்கை பாதுகாப்பு படை குழு முகாமிற்கு விஜயத்தை மேற்கொண்டு படையினர் மத்தியில் உரையாற்றுகையில், அமைதிகாக்கும் படையினரின் விசுவாசம் மற்றும் தொழிலாண்மை ஆகியவற்றைப் பாராட்டினார்.

அதேவேளையில் தென் சூடானில் உள்ள சிறிமேட் 2 வைத்தியசாலையின் அமைதிகாக்கும் படையினர், 73 வது சுதந்திர தினத்தன்று, ஐநா அமைதி காக்கும் படை முகாமின் பொது இடங்களில் சிரமதான பணிகளில் ஈடுபட்டனர்.

Thu, 02/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை