சீனா தலைவருடன் பைடன் முதல் முறையாக உரையாடல்

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உடன் முதல் முறை தொலைபேசியில் உரையாடி இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சின்ஜியாங் பிராந்தியத்தில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவலை தெரிவித்ததாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

இதன்போது இரு நாட்டு வர்த்தகம், ஹொங்கொங்கில் இடம்பெறும் கடுமையான நடவடிக்கைகள் மற்றும் தாய்வானில் நிலவும் தற்போதைய பதற்றம் பற்றியும் பைடன் அழுத்தத்தை வெளியிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் இரு நாட்டு உறவுகளும் மோசமடையும் என்ற எச்சரிக்கையை பைடனிடம் ஜின்பிங் விடுத்ததாக சீன அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. வர்த்தகம், உளவு விவகாரம் மற்றும் பெருந்தொற்று போன்ற விடயங்களில் அண்மைக் காலத்தில் சீனா மற்றும் அமெரிக்கா இடையில் முறுகல் அதிகரித்துள்ளது. இந்த தொலைபேசி உரையாடலுக்குப் பின் பைடன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “அமெரிக்க மக்களுக்கு நன்மை பயக்கும்போது நான் சீனாவுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று நான் அவரிடம் கூறினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Fri, 02/12/2021 - 13:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை