Header Ads

'ஒரு நாடு ஒரு சட்டம்' எனும் கொள்கை என்று வரும்போது முஸ்லிம் சட்டங்களை மட்டுமே குறிவைத்து செயற்பட முடியாது

ரதன தேரருக்கு நீதி அமைச்சர் அலி சப்ரி பதில்

 ஏனைய மத சட்டங்களிலும் திருத்தம் வரும்

 முஸ்லிம் பெண்களின் திருமண வயது 18 ஆகும்

சம்ஷ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்ற கோட்பாடு செயல்படுத்தப்பட வேண்டுமென்றால் முஸ்லிம் சட்டத்தை மாத்திரம் நீக்குவதை செய்ய முடியாது. அனைத்து தனியார் சட்டங்களும் நீக்கப்பட வேண்டுமென நீதி அமைச்சர் அலி சப்ரி நேற்று பாராளுமன்றத்தில் அத்துரலியே ரதன தேரருக்கு பதிலளித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரரால் எழுப்பப்பட்டிருந்த கேள்வியொன்றுக்கு நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்ற கோட்பாட்டின் பிரகாரம் அரசாங்கம் செயற்படுவதுடன், அதன் பொருளானது சட்டம் அனைவருக்கும் சமமானதாகும். இலங்கையில் பல தனியார் சட்டங்கள் செயற்பாட்டிலுள்ளன. கண்டி சட்டம், யாழ்ப்பாண தேசவழமை சட்டம்,   மின்னேரியா மற்றும் சப்புகஸ்கந்த ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி சிறுமியொருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மின்னேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹபரண - பொலன்னறுவை பிரதான வீதியில் பொலன்னறுவை நோக்கிச்சென்ற லொறி, பாதையை கடக்க முற்பட்ட சிறுமி ஒருவரின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது படுகாமடைந்த சிறுமி பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

கிரிந்தளை பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் லொறியின் சாரதியை கைதுசெய்துள்ள மின்னேரியா பொலிசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை, சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மாகொல - கிரிபத்கொட வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று பாதையை கடந்துச்செல்ல முற்பட்ட பெண்ணொருவரின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது படுகாமடைந்த பெண் கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். கந்தளை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தின்போது மோட்டார் சைக்கிளின் ஓட்டுனரும் காயமடைந்துள்ளதுடன், அவர் றாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்புகஸ்கந்த பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

Sat, 02/13/2021 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.