கொரோனா வைரஸ் இன்னமும் கட்டுப்பாட்டை மீறவில்லை

இதே சுகாதார வழிகாட்டலை தொடருமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டில் கொரோனா தொற்று இன்னும் கட்டுப்பாட்டை மீறவில்லையென சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று முற்றிலுமாக கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை பின்பற்றப்படுகின்ற அதே சுகாதார வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து பின்பற்றுமாறு சுகாதாரப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுள்ளது.

கொரோனா தொற்று தொடர்பில் பொது மக்கள் சாதாரணமாகச் சிந்தித்துச் செயற்படக் கூடாதென வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் வைபங்கள், திருமண விழாக்கள் மற்று மரணச்சடங்கு காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா தொற்று பரவ காரணமாக அமைந்தன.

இதனைக் கருத்திற்கொண்டு அத்தியாவசிய தேவையின்றி இது போன்ற வைபவங்களில் கலந்து கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அத்துடன் அத்தியாவசிய தேவை ஏற்படுமானால் சரியான சுகாதார வழிகாட்டிகளைப் பின்பற்றி இந்த வைபவங்களுக்கு சென்று உடனடியாக திரும்புமாறு பொது மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் கொரோனா தடுப்பூசிகளைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நாளாந்தம் 800 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சுகாதாரப் பிரிவு மற்றும் பொது மக்களின் அனுசரணையில் கொரோனா தொற்று தற்போது இந்த நிலைமையில் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Fri, 02/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை