ஏழை நாடுகள் இந்த ஆண்டில் தடுப்பூசி பெறுவது சாத்தியமில்லை

செல்வந்த நாடுகள் தமது தேவைக்கு அதிகமாக ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட கொவிட்–19 தடுப்பு மருந்துகளை வாங்கி இருப்பதால் ஏழை நாடுகள் இந்த ஆண்டில் தடுப்பு மருந்தை பெறுவதற்கு சாத்தியம் இல்லை என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. உலக செல்வந்த நாடுகளின் ஜி7 மாநாடு நேற்று ஆரம்பமான நிலையில் தம்மிடம் இருக்கும் மேலதிக தடுப்பு மருந்துகளை பகிர்ந்து கொள்வதற்கு அந்த நாடுகள் விருப்பத்தை வெளியிட்டுள்ளன.

“உலகளாவிய மீட்சி மற்றும் ஏனைய நாடுகளை பாதிப்புக்கு உள்ளாக்கி நாடுகள் தமது சொந்த நாட்டின் தடுப்பு மருந்து தேவைக்கு முன்னுரிமை அளிப்பது அதிக தடுப்பு மருந்தை பெறும் தடுப்பு மருந்து தேசியவாதத்தின் உருவாக்கமாகும்” என்று வறுமைக்கு எதிரான 'வன்' என்ற அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்த பெருந்தொற்றில் இருந்து உயிர்களை பாதுகாக்க வேண்டுமாயின் தடுப்பு மருந்தை பகிர்ந்தளிப்பதில் பெரும் திருத்தங்களை செய்ய வேண்டி இருப்பதாக வன் அமைப்பின் கொள்கை வகுப்புக் குழு சுட்டிக்காட்டியது.

வெறுமனே 10 நாடுகள் அனைத்து தடுப்பு மருந்துகளின் 75 வீதமானதை பெற்றிருப்பதாக ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கடந்த புதனன்று தெரிவித்திருந்தார். இதனால் 130 நாடுகள் இன்றும் ஒரு தடுப்பு மருந்தைக் கூடப் பெறவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா தமது தடுப்பு மருந்து விநியோகத்தில் 3 தொடக்கம் 5 வீதமானதை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு வழங்குவதற்கு பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்.

ஏழை நாடுகளில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய குறைந்தது 20 வீதமான மக்கள் தொகையினருக்கு இந்த ஆண்டில் மாத்திரம் தடுப்பு மருந்தை விநியோகிக்க 5 பில்லியன் டொலர்கள் தேவையாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Sat, 02/20/2021 - 16:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை