உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் அறிக்கை பாராளுமன்றில் விரைவில் சமர்ப்பிக்க நடவடிக்கை

ஆளுங்கட்சி பிரதம கொரடா பதில்

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் விசாரணை அறிக்கைகளை ஒளிக்கமாட்டோம். கூடிய விரைவில் சபையில் அவை முன்வைக்கப்படுமென ஆளுங்கட்சி   சமர்ப்பிக்கப்படவில்லையென பிரதான எதிர்க்கட்சிகள் நேற்று வெள்ளிக்கிழமை சபையில் கடும் எதிர்ப்பை வெளியிட்டன.

பாராளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல,

“ கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எம்மால் விடுக்கப்படும் கோரிக்கைகள் எல்லாம் உரியவகையில் நிறைவேற்றப்படுவதில்லை. அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையையும், உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அறிக்கையையும் சபையில் சமர்ப்பிக்குமாறு கேட்டிருந்தோம். இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை.

அரசிடம் பெரும்பான்மை இருப்பதால் தனக்கு ஏற்றவகையிலேயே செயற்படுகின்றது.” – என்றார்.

அதன்பின்னர் இது குறித்து கருத்து வெளியிட்ட தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க,

“ ஜனாதிபதியிடம் 02 ஆணைக்குழுக்களின் விசாரணை அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளன.அதில் அரசியல் பழிவாங்கல் தொடர்பான அறிக்கையில் எனது பெயர் இருப்பதாகவும், விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது எனவும் கூறப்படுகின்றது.

அதேபோல் உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் 200 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சுமார் 500 பேர் வரையானோர் காயமடைந்தனர். இது சர்ச்சைக்குரிய பிரச்சினையாகும். ஜனாதிபதி ஆணைக்குழுவிலுள்ள விடயங்கள் ஊடகங்களில் வெளியாகின்றன. ஆனால் இன்னும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அடுத்தவாரம் விவாதம் நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. தாமதிக்கப்படுவதை ஏற்கமுடியாது. எனவே ,விரைவில் இரு அறிக்கைகளும் முன்வைக்கப்படவேண்டும் என்றார்.

அதேவேளை, அறிக்கைகளை விரைவில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன இதற்கு பதிலளித்தார்.

சம்ஷ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 02/13/2021 - 18:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை