தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கொழும்பிலும் ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி, நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்துக்கு வலு சேர்க்கும் நோக்குடன் கொழும்பு, செட்டியார் தெரு வர்த்தகர்களும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செட்டியார் தெருவிலுள்ள அனைத்து நகைக்கடைகளையும் மூடி, பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். கொழும்பு − ஐந்துலாம்பு சந்தியில் பதாகைகளை ஏந்திவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடு

த்தனர்.பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபா சம்பளத்தை வலியுறுத்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விடுத்த அழைப்பையேற்று முழுக் கடையடைப்பு (பூரண ஹர்த்தால்) போராட்டத்திற்கு கொழும்பு வாழ் தமிழர்களும் நேற்று ஆதரவு வழங்கினர். செட்டியார் தெருவிலுள்ள நகைக்கடைகள் நேற்று நண்பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை மூடப்பட்டிருந்தன. ஒரு மணி நேரத்தில் ஐந்துலாம்பு சந்தியில் அமைதியான முறையில், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, செட்டியார் தெரு வர்த்தகர்கள் மற்றும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மலையக மக்களின் நாளாந்த அடிப்படை சம்பளம் 1,000 ரூபாவை உயர்வை வலியுறுத்தி, ஐந்துலாம்பு சந்தியில் நடத்தப்பட்ட போராட்டத்தில், அனைவரையும் கலந்துக்கொள்ளுமாறும் அவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

Sat, 02/06/2021 - 09:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை