கல்வி அமைச்சின் அறிக்கை கையளிப்பு

- கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரேரா

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி சிக்கல்கள் சம்பந்தமாக கல்வி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் தெரிவித்துள்ள கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, கல்வி அமைச்சின் அறிக்கையை ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதி செயலகத்தினால் மேற்படி சிக்கல்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதுவரை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை ஆறாம் தரத்துக்கு இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் வெட்டுப் புள்ளிகளை குறைப்பதில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அதனை தவிர்ப்பதற்கு மேற்கொள்ளவேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.எனினும் வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது வெட்டுப்புள்ளி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வாகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 02/15/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை