ஒரு முறை செலுத்தும் தடுப்பூசிக்கு அமெரிக்க நிர்வாகம் பச்சைக்கொடி

ஒரு முறை மாத்திரமே செலுத்தக் கூடிய ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பு மற்றும் செயல்திறன் கொண்டது என அமெரிக்க மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன்படி அடுத்த சில நாட்களில் அமெரிக்காவில் அனுமதி பெறும் மூன்றாவது கொவிட்–19 தடுப்பு மருந்தாக இது இடம்பெற வழி எற்பட்டுள்ளது.

பைசர் மற்றும் மொடர்னா தடுப்பு மருந்தை விடவும் இந்தத் தடுப்பு மருந்து செலவு குறைவானது என்பதோடு உறைவிப்பான் கருவிக்கு பதில் அதனை குளிர்சாதனப் பெட்டியில் களஞ்சியப்படுத்த முடியுமாக உள்ளது.

44 ஆயிரம் பேருக்கு பல்வேறு நாடுகளில் இந்த தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட்டதில் எந்தவிதப் பக்கவிளைவுகளும் ஏற்படாததால் மருந்து பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டது.

இந்த தடுப்பு மருந்து சோதனைக்கு உட்பட்ட எவரும் உயிரிழக்கவில்லை என்பதோடு தடுப்பு மருந்து பெற்று 28 நாட்களுக்கு பின் எவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் இறுதிக்குள் சுமார் 2 கோடி டோஸ்கள் தயாரிக்கப்பட்டு உலகின் பல நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் உடனடியாக 40 இலட்சம் டோஸ்கள் ஏற்றுமதிக்கு தயாராக இருப்பதாகவும் அந்நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Fri, 02/26/2021 - 11:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை