காத்தான்குடியின் ஏனைய பிரதேசங்கள் நாளை விடுவிப்பு

காத்தான்குடியின் ஏனைய பிரதேசங்கள் நாளை விடுவிப்பு-Isolation of Kattankudy Completely Lifted from Tomorrow Morning 5am

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நான்கு வீதிகள் நாளை (01) அதிகாலை 5.00 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

கொவிட்-19 தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதான, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.

அதற்கமைய, மோதினார் ஒழுங்கை, கபூர் வீதி, சின்னதோனா வீதி, ரெலிகொம் வீதி, முதலாம் குறுக்கு தெரு என்பன நாளை அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

இதன் மூலம் காத்தான்குடி முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் அச்சம்  காரணமாக கடந்த டிசம்பரம் 31ஆம் திகதி முதல் காத்தான்குடி பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 21ஆம் திகதி  காத்தான்குடியின் 8 கிராம அலுவலர் பிரிவுகளும், அதன் பின்னர், 40 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் கடந்த பெப்ரவரி 09ஆம் திகதியும் என, இரண்டு கட்டங்களாக விடுவிக்கப்பட்ட நிலையில், 4  வீதிகள் மாத்திரம் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது, குறித்த 4 வீதிகளும் நாளை (01) அதிகாலை 5.00 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

(புதிய காத்தான்குடி  தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)

Sun, 02/28/2021 - 17:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை