ஊழியர் பணிப்பகிஷ்கரிப்பால் நோயாளர்கள் அவதி

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நேற்று   சுகாதார ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பினால் வைத்தியசாலையின் வழமையான செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டு நோயாளிகள் பெரும்  சிரமத்திற்குள்ளாகினர். 

நாட்டின் பல பகுதிகளில் சுகாதார துறை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட பணி பகிஷ்கரிப்பு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையிலும்  முன்னெடுக்கப்பட்டது. இதனால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். வெளிநோயாளர் பிரிவில் அதிகளவு மக்கள் நீண்டநேரம் காத்திருந்ததோடு, மாதாந்த கிளினிக் உள்ளிட்ட செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டிருந்தன.    அரசாங்கத்தின் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் சுகாதார சேவைக்குள்  நியமனம் வழங்க தெரிவு செய்யப்பட்டவர்களை உள்வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  இப்பணிப்பகிஷ்கரிப்பு  நேற்று  கிளிநொச்சியிலும்  இடம்பெற்றது.

முறையற்ற வகையிலேயே குறித்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக   தெரிவித்த அவர்கள் இது ஆட்சேர்ப்பு விதிமுறைகளிற்கு எதிரான ஒரு செயற்பாடு.  ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில்  சுகாதார துறைக்கு உள்ளீர்க்கப்படும் ஊழியர்கள்   நியமனத்தை நீதியான முறையில் முன்னெடுக்க வேண்டும் என  தாங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டதாக தெரிவித்தனர்.

கிளிநொச்சி குறூப் நிருபர் 

 

Thu, 02/25/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை