உலக கொரோனா தொற்றில் ஐந்தாவது வாரமாக வீழ்ச்சி

உலகெங்கும் கொரோனா தொற்று சம்பவங்கள் கடந்த வாரம் 2.7 மில்லியன் என 16 வீதம் வீழ்ச்சி கண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

வாரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 81,000 என 10 வீதம் வீழ்ச்சி கண்டிருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு இந்த பெருந்தொற்று பற்றிய வாராந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் ஆறில் ஐந்து பிராந்தியங்களில் இரட்டை இலக்க வீதத்தில் புதிய தொற்று சம்பவங்களில் சரிவு ஏற்பட்டுள்ளது. கிழக்கு மத்தியதரைப் பிராந்தியத்தில் மாத்திரமே இந்த எண்ணிக்கை 7 வீதம் அதிகரித்துள்ளது.

புதிய நோய்த் தொற்று சம்பவங்களில் தொடர்ச்சியாக ஐந்தாவது வாரமாக வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அத்னொம் கெப்ரியேசுஸ் கடந்த திங்கட்கிழமை கூறியிருந்தார். ஜனவரி 4 ஆம் திகதிய வாரத்தில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான தொற்று சம்பவங்கள் பதிவான நிலையில் அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதியா குறைந்துள்ளது.

“நோய் திரிபுகள் இருந்தபோதும் எளிமையான பொதுச் சுகாதார செயற்பாடுகள் பயன்தந்திருப்பதை இது காட்டுகிறது” என்று டெட்ரோஸ் தெரிவித்தார்.

நோய்ப்பரவலின் வேகம் தணிந்துள்ளதே தவிர, அது முற்றாகக் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

Thu, 02/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை