பதிவு செய்யப்படாத கை சுத்திகரிப்பான்களுக்கு இன்று முதல் தடை

பதிவு செய்யப்படாத கை சுத்திகரிப்பான்களுக்கு இன்று முதல் தடை-Hand Sanitizer Not Registered Under NMRA Banned From Feb 01

- NMRA இலக்கம் காட்சிப்படுத்துவதும் அவசியம்

தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையில் (NMRA) பதிவு செய்யப்படாத, கை சுத்திகரிப்பான்களின் (Hand Sanitizer) இறக்குமதி, விற்பனை உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளுக்குமான தடை இன்று (01) முதல் அமுலுக்கு வருகிறது.

இன்று, பெப்ரவரி 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால், அண்மையில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத கை சுத்திகரிப்பான்களை, விற்பனை செய்வதோ, உற்பத்தி செய்வதோ, களஞ்சியப்படுத்துவதோ, விநியோகிப்பதோ, விற்பனைக்காக  காட்சிப்படுத்துவதோ, விற்பனைக்காக வெளிப்படுத்துவதோ, விற்பனைக்கு கோரவோ, மொத்தமாகவோ அல்லது சில்லறையாகவே விற்பனை செய்யவோ முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த சுத்திகரிப்பானுக்கு NMRA இனால் வழங்கப்பட்ட பதிவு இலக்கமானது, கை சுத்திகரிப்பான் பொதியில் அல்லது கொள்கலனில் தெளிவாக விளங்கக் கூடிய வகையில், காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

Mon, 02/01/2021 - 08:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை