சிரிய தலைநகரில் இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல்

சிரியாவின் வான் பாதுகாப்பு முறை மூலம் தலைநகர் டமஸ்கஸில் இஸ்ரேலின் தாக்குதலை முறியடித்ததாக சிரிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

சிரியாவில் ஈரானின் இலக்குகள் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலின் தொடர்ச்சியாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் வெளிநாட்டுச் செய்திகளுக்கு பதலளிக்க முடியாது என்று இஸ்ரேல் இராணுவம் இது பற்றி குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்கிய இடங்கள் குறித்த விபரத்தை சிரிய அரச ஊடகம் வெளியிடவில்லை. இஸ்ரேலிய இராணுவ விமானங்கள் கோலன் குன்றுக்கு மேலால் பறந்து தலைநகர முனையில் தாக்குதல் நடத்தியது என்று சிரிய இராணுவத்தின் அறிவிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. “தலைநகர வானுக்கு மேலால் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல்களை எமது வான் பாதுகாப்பு முறை தொடர்ந்து முறியடிக்கும்” என்று சிரிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் ஈரானிய ஆதரவு போராளிகள் ஆதிக்கம் செலுத்தும் தலைநகரின் தெற்கில் உள்ள பிரதான இராணுவ தளம் ஒன்றின் மீதே தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக சிரிய இராணுவத்தில் இருந்து வெளியேறிய தரப்பு ஒன்று குறிப்பிட்டுள்ளது.

Tue, 02/16/2021 - 07:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை