எல்.ஆர்.சி அலுவலக இடமாற்றத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு கவனயீர்ப்பு

எல்.ஆர்.சி காணி ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், எல்.ஆர்.சி அலுவலகம் அநுராதபுரத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பளையில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று காலை பத்து மணிக்கு நூற்றுக்கணக்கான பொது மக்கள் ஒன்று சேர்ந்து இவ் ஆர்ப்பாட்டத்தை கரந்தாய் பிரதேசத்தில் மேற்கொண்டனர். கடற்றொழிலாளர்கள் அமைப்பு மற்றும் பால் பண்ணை ஆகியவற்றுக்கு பளையில் உள்ள எல்.ஆர்.சி காணி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த காணிகளை தனிநபர்கள் அடாத்தாக பிடித்தமையினை கண்டித்தும், எல்.ஆர்.சி யாழ்.அலுவலகம் அநுராதபுரத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், காணியற்ற ஏழை மக்கள் உள்ள போதும் எல்.ஆர்.சி காணிகள் வசதிப்படைத்தவர்களுக்கு வழங்கப்படுகின்ற முயற்சிகளுக்கு எதிர்புத் தெரிவித்தும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

மாற்றாதே மாற்றாதே எல்.ஆர்.சி அலுவலகத்தை அநுராதபுரத்திற்கு மாற்றாதே, வழங்காதே வழங்காதே முதலாளிகளுக்கு காணியினை வழங்காதே, காணியற்ற, ஏழைகளுக்கு காணியினை வழங்கு போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளையும் பொது மக்கள் ஏந்தியிருந்தனர்.

கிளிநொச்சி குறூப் நிருபர்

Sat, 02/13/2021 - 12:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை