பிரதமரின் தீர்மானத்தை மீறும் செயல் எவருக்கும் இருக்க முடியாது

பாராளுமன்றில் மு.கா.தலைவர் ஹக்கீம்

கொரோனா தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பாராளுமன்றத்தில் திட்டவட்டமான பதிலை அளித்துள்ள நிலையில் அவருக்கும் அரசாங்கத்துக்கும் அப்பால் தீர்மானமெடுக்க யாருள்ளதென எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் சபையில் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் பாராளுமன்ற உறுப்பினர் முஜிப்புர் ரஹ்மான், முஸ்லிம்களின் சடலங்களை நல்லடக்கம் செய்யும் விவகாரம் தொடர்பில் முன்வைத்த விசேட கூற்றுக்கு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோப்புள்ளே பதிலளித்திருந்த நிலையில் அவரது உரையை தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஹக்கீம் எம்.பி மேலும் தெரிவித்ததாவது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் இது தொடர்பில் திட்டவட்டமான பதிலொன்றை அளித்திருந்தார். அதாவது நல்லடக்கம் செய்வதற்கான அனுமதி காலதாமதமானாலும் மிகவும் அனுபவம் வாய்ந்த தீர்மானமாகும். அவர் ஒரு மூத்த அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியாகும். இந்த பிரச்சினை தீர்க்கப்படாமையால் மக்கள் மிகவும் கவலையாக உள்ளனர். இந்த விடயத்தில் அனைத்து முஸ்லிம்களும் ஒரே பக்கத்தில்தான் உள்ளனர். பிரதமர் மிகவும் தெளிவாக கூறியுள்ளார். தற்போது தொழில்நுட்ப குழுவில் தீர்மானிக்க வேண்டுமென்கின்றனர். பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் அப்பால் தீர்மானமெடுக்க யார் உள்ளனர்?.

இதனால் தேவையற்ற பிரச்சினைகள் இந்த நாட்டில் உருவாக்கின்றன. தற்போது இந்த விடயம் ஜெனீவாவுக்கும் சென்றுள்ளது. அது நடக்க வேண்டுமென நாம் எதிர்பார்க்கவில்லை. எவரும் எதிர்பார்க்கவில்லை. ஆகவே, பிரதமரின் தீர்மானத்தை அவமதிக்க வேண்டாமென கோருகிறோம் என்றார்.

 

சம்ஷ் பாயிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 02/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை