அறிக்கையின் முதல் பிரதி சட்ட மாஅதிபருக்கு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சட்ட மாஅதிபருக்கு கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தினால் மேற்படி அறிக்கையின் பிரதி சட்ட மாஅதிபருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபரின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

மேற்படி ஆணைக்குழுவின் அறிக்கையில் முதலாம் அலகு மாத்திரமே அவ்வாறு சட்ட

மாஅதிபருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் ஏனைய பகுதிகளின் பிரதிகளையும் சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்குமாறு சட்ட

மாஅதிபர் ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாகவும் சட்டத்தரணி நிஷாரா ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டதையடுத்து அது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அந்த அறிக்கையின் பிரதி தமக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி பரிந்துரைகள் தாமதமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்து வருகிறார்.

மேற்படி அறிக்கை சட்ட மாஅதிபருக்கு கையளிக்கப்பட்டு அவர் அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். அதேவேளை மேற்படி இறுதி அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விஷேட குழு தொடர்பிலும் அவர் அதிருப்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இத்தகைய நிலையிலேயே மேற்படி அறிக்கை நேற்றையதினம் சட்ட மாஅதிபருக்கு கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 02/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை