லத்தீன் அமெரிக்காவில் கொரோனா அதிகரிப்பு

உலகில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் தாக்கமும், உயிரிழப்பும் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த, பான் அமெரிக்க சுகாதார அமைப்பின் இயக்குநர் கரிஸ்ஸா எட்டினா, மெக்ஸிகோவில் வார விடுமுறை நாட்களிலும், சுற்றுலாத்தலங்களிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கரீபியன் நாடுகளான டொமினிக்கன் குடியரசு, ஹைட்டி, போர்டோ ரிகோ மற்றும் கியூபா உள்ளிட்ட நாடுகளிலும் எதிர்பார்த்ததை விட அதிக வேகத்தில் கொரோனா பரவுவதாக எட்டினா கூறியுள்ளார்.

Fri, 02/05/2021 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை