போர்த்துக்கலில் நிரம்பும் அவசர சிகிச்சைப் பிரிவு

போர்த்துக்கலில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பிரதான நிலத்தில் வெறும் ஏழு அவசர சிகிச்சை பிரிவு கட்டில்களே எஞ்சி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்–19 நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட 850 அவசர சிகிச்சை பிரிவு கட்டில்களில் தற்போது 843 கட்டில்கள் நிரம்பிவிட்டதாக போர்த்துக்கல் சுகாதார அமைச்சு கடந்த சனிக்கிழமை அறிவித்துள்ளது. அந்நாட்டில் 10 மில்லியன் மக்கள் தொகைக்கு மேலதிகமாக 420 அவசர சிகிச்சை பிரிவு கட்டில்களே உள்ளன. இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நோயாளிகள் அந்நாட்டு தீவுகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்றினால் போர்த்துக்கலில் இதுவரை 12,179 பேர் உயிரிழந்திருப்பதோடு 711,018 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன்படி கடந்த ஏழு நாட்களில் உலகில் சராசரியாக அதிக உயிரிழப்பு மற்றும் நோய்த் தொற்று சம்பவங்களில் பதிவான நாடாக போர்த்துக்கல் மாறியுள்ளது.

இதனால் லிஸ்போன் மருத்துவமனைகளில் அம்புலன்ஸ் வண்டிகள் வரிசையில் காத்துக் கிடக்கின்றன. அந்நாட்டு மருத்துவத் துறை நெருக்கடிக்கு முகம்கொடுத்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Mon, 02/01/2021 - 14:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை