முடக்கத்தை படிப்படியாக தளர்த்த பிரிட்டன் திட்டம்

முடக்கத்தை படிப்படியாக தளர்த்த பிரிட்டன் திட்டம்-Britain Plan to Remove Lockdown Step by Step

பிரிட்டனில் நடப்பில் இருக்கும் கொரோனா தொற்றுக்கு எதிரான பொது முடக்கம், நான்கு கட்டங்களாக படிப்படியாய் தளர்த்தப்படும் என அந்நாட்டுப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் செயல்படுத்தப்பட்டுள்ள மிகக் கடுமையான முடக்க நிலைகளில் இதுவும் ஒன்று. இயற்கைக்கு முரணாகச் செயல்பட முடியாது என்பதைத் ஜோன்சன் நினைவூட்டினார்.

இதன்படி ஏப்ரல் 12ஆம் திகதி கடைகளையும், முடிதிருத்தும் நிலையங்களையும் திறக்க பிரிட்டிஷ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வெளிப்புற மதுக்கூடங்கள், உணவகங்கள் ஆகியவையும் அதே நாளில் திறக்கப்படும்.

உள்ளரங்கில் செயல்படும் நாடக அரங்குகள், திரையரங்குகள், கட்டடங்களில் அமைந்துள்ள மதுக்கூடங்கள், உணவகங்கள் மே 17ஆம் திகதி திறக்கப்படும். விளையாட்டு அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளைக் காணக் குறிப்பிட்ட அளவில் மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுவர்.

எதிர்வரும் மே மாதம் முதல், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணங்களைப் பிரிட்டிஷ் மக்கள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 21ஆம் திகதிக்குள் சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படலாம்.

நோய்த்தொற்றுக்கு ஆளாகி, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்தால் முடக்கத்தைத் தளர்த்தும் நடவடிக்கை ஒத்திவைக்கப்படலாம்.

Wed, 02/24/2021 - 15:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை