தடுப்பு மருந்துகளை கலந்து கொடுக்க பிரிட்டன் திட்டம்

பிரிட்டன் ஆய்வாளர்கள் பைசர் தடுப்புமருந்தையும் அஸ்ட்ராசெனகா தடுப்புமருந்தையும் கலந்துகொடுப்பது பற்றி ஆலோசித்து வருகின்றனர்.

அத்தகைய முயற்சியை மேற்கொள்ளும் உலகின் முதல் நாடாக பிரிட்டன் அமையும்.

அந்நாட்டில் வெவ்வேறு வகையான கொரோனா வைரஸ் தோன்ற ஆரம்பித்திருப்பதைத் தொடர்ந்து அந்த அணுகுமுறை ஆராயப்படுகிறது. வைரஸ் பரவலைத் துரிதமாகக் கட்டுப்படுத்தும் புதிய வழிகளைக் கண்டறியும் நோக்கில் அது ஒரு சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்படும்.

புதிதாகத் தோன்றியுள்ள வைரஸ் வகைகளில் பிரிட்டன், தென்னாபிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து தோன்றியவையே வேகமாகப் பரவும் ஆற்றல் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மரபணு மாற்றம் பெற்ற சுமார் 4,000 புதிய கொரோனா தொற்றுகள் உலகெங்கும் பரவி இருப்பதாக நம்பப்படுகிறது. இவைகளுக்கு தமது தடுப்பு மருந்தின் செயல்திறனை உறுதி செய்வதில் பைசர்–பயோஎன்டெக், மொடர்னா, ஒக்ஸ்போர்ட்–அஸ்ட்ராசெனக்கா மற்றும் ஏனைய மருந்து நிறுவனங்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2019 கடைசியில் சீனாவில் தோன்றிய கொவிட்–19 தொற்றினால் உலகெங்கும் 2.268 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.

Sat, 02/06/2021 - 08:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை