நிபுணர்குழுவின் அறிக்கைக்கமைய சர்வதேசத்திற்கு பதிலளிக்கவேண்டும்

“மகிந்த ராஜபக்ஷவின் காலத்தில் பெறப்பட்ட சர்வதேச போர் குற்ற நிபுணர்கள் ஐவரின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இலங்கை அரசாங்கத்தினதும் இராணுவ வீரர்களினதும் குற்றமற்ற தன்மை தொடர்பாக சர்வதேசத்திற்கு வாய்மொழி மூல பதிலை முன்வைப்பது சரியான தீர்வாகும்” என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கொடுப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை தேசிய சுதந்திர முன்னணி அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் கவுன்சில் இலங்கைக்கு எதிராக முன்வைத்துள்ள யோசனைகளிலிருந்து வெளியேற அரசாங்கம் எடுத்த முடிவு பாராட்டுக்குரியது என்றும் அத்துடன் நின்றுவிடாமல் இலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுப்பதற்கு அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழுவை நியமித்தார். சர்வதேச போர்குற்ற நிபுணர்களின் அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு சர்வதேசத்தின் முன்னிலையில் வாய்மொழி மூல பிரதிவாதங்களை முன்வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் தேசிய சுதந்திர முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மில் சுட்டிக்காட்டியுள்ளார். போர் குற்ற நிபுணரான டெஸ்மன் த சில்வா 23.02.2014 ஆம் திகதி முன்வைத்த அறிக்கையில் இலங்கைப் படைக்கு எதிராக போர்குற்றம் சுமத்தியுள்ள தருஸ்மான் அறிக்கை பொய்யானது என உறுதி செய்ய்பபட்டுள்ளதாகவும் இலங்கை பாதுகாப்பு படையினர் சர்வதேச மனிதாபிமான சட்டத்துக்கு அமைய செயல் படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளதாக மொஹமட் முஸாம்மில் அதனை எடுத்துக் காட்டித் தெரிவித்துள்ளார்.

Mon, 02/08/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை