போலியான முகக்கவசங்களின் விற்பனையைத் தடுக்க முயற்சி

முகக்கவசத் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் 3எம் நிறுவனம், போலியான என்95 முகக்கவசங்களின் விற்பனையைத் தடுத்து நிறுத்த சட்ட அமுலாக்க நடவடிக்கைகளில் உதவிவருவதாகத் தெரிவித்துள்ளது.

காற்றில் கலந்துள்ள மாசுப் பொருட்களில் 95 வீதத்தை வடிக்கட்டும் ஆற்றல் கொண்டவை என்95 முகக்கவசங்கள். கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன்னிலை வகிக்கும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு, அந்த முகக்கவசம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

போலியான முகக்கவசத் தயாரிப்புக்கு எதிராகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் உலகெங்கும் அவை, தொடர்ந்து விற்பனைக்கு வருகின்றன. இதுவரை மில்லியன் கணக்கான போலி முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அது, சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்குக் வைரஸ் தொற்றும் அபாயத்தை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

Sun, 02/14/2021 - 18:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை