Header Ads

கிளிநொச்சியில் பாடசாலைக்கு நிரந்தர அதிபரை நியமிக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி யூனியன் குளம் பாடசாலைக்கான அதிபரை நியமிக்கக் கோரி பாடசாலை நுளைவாயிலை மூடி நேற்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட மிகவும் பின் தங்கிய கிராமத்தில் அமைந்துள்ள யுனியன் குளம் பாடசாலைக்கு கடந்த 8 வருடங்களுக்கு மேலாக நிரந்தர அதிபர்கள் எவரும் நியமிக்கப்படாமல் இருப்பதாக பல தடவைகள் பெற்றோர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

இது தொடர்பாக முன்னரும் பல தடவை சுட்டிக்காட்டப்பட்டு கோரிக்கை கடிதங்கள் அனுப்பட்ட போதும் இதுவரை அதிபர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை. இந் நிலையில் நேற்று காலை இப் பாடசாலைக்கு நிரந்தர அதிபரை நியமிக்க கோரி பெற்றோர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

காலை பாடசாலை ஆரம்ப நேரத்தில் பாடசாலை நுழைவாயிலை மூடி பேராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி தற்காலிகமாக அதிபர் ஒருவரை நியமிப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

கிளிநொச்சி குறூப் நிருபர்

Tue, 02/09/2021 - 11:28


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.