வூஹானில் நிபுணர் குழு விசாரணைகள் நிறைவு

கொரோனா வைரஸ் சீனாவின் வூஹான் நகரில் எவ்வாறு பரவ ஆரம்பித்தது என்பது குறித்து உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் நடத்திய ஒரு மாத கால விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த 4 வாரங்களாக அவர்கள் சீன அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றி வந்தனர். இரு தரப்பும் இணைந்து நேற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி இந்த விசாரணை பற்றி விளக்கினார்கள்.

விசாரணைக் காலம் முழுவதும், தொடர்ந்து ஒத்துழைப்புத் தந்த சீனாவை உலக சுகாதார அமைப்பு பாராட்டியது.

சம்பந்தப்பட்ட இடங்களைச் சென்று பார்வையிடுவதற்கும், சம்பந்தப்பட்ட நபர்களைச் சந்திப்பதற்கும் சீனா முழு அனுமதி வழங்கியதை அது சுட்டிக்காட்டியது.

அந்த விசாரணை நடவடிக்கை இரு தரப்புக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தியதாக சீனா குறிப்பிட்டது.

இந்த நிபுணர் குழுவில் விலங்கு மருத்துவர், வைரஸ் தொடர்பான நிபுணர்கள், உணவுப் பாதுகாப்பு தொடர்பான நிபுணர்கள் மற்றும் தொற்றுநோயியலாளர்கள் உட்பட 14 பேர் உள்ளடங்குகின்றனர்.

Wed, 02/10/2021 - 10:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை