துறைமுக கிழக்கு முனைய விவகாரம் பற்றி இன்று அமைச்சரவையில் ஆராய்வு

- விற்கும் யோசனையை எதிர்ப்பதாக 10 கட்சிகள் கூட்டாக அறிவிப்பு

கொழும்பு துறைமுக கிழக்கு முனைய விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 10 கட்சிகள் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன் கிழக்கு முனையம் துறைமுக அதிகார சபையின் நிர்வாகத்தின் கீழ் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது.

அது தொடர்பில் பத்து கட்சிகளும் கலந்துரையாடி ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.

கிழக்கு முனையம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்சவின் வாசஸ்தலத்தில் மேற்படி பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள விமல் வீரவன்ச அது தொடர்பில் அமைச்சரவையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.கிழக்கு முனையத்தை வழங்குவது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டால் ஆதரிக்கப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

மேற்படிபேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கருத்து தெரிவிக்கையில்;

தேசிய வளங்களை விற்பதற்கு எந்த வகையிலும் மேற்படி பத்து கட்சிகளும் இணக்கம் தெரிவிக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி பேச்சுவார்த்தையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கலந்து கொண்டிருந்ததுடன் அதன் செயலாளர் அமைச்சர் தயாசிறி ஜயசேகர கருத்துதெரிவிக்கையில் முதலீடு என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் தேசிய வளங்களை இல்லாதொழிப்பது தொடர்பில் எந்த விதத்திலும் தமது கட்சி இணங்க போவதில்லை எனக் குறிப்பிட்டார்.

அமைச்சர் உதய கம்மன்பில அது தொடர்பில் தெரிவிக்கையில்;

கிழக்கு முனையத்தின் அபிவிருத்திக்காக நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு வேறு உபாயங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், சமசமாஜக் கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண உட்பட மேலும் பலர் இதே கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 02/01/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை