சிறந்த அரசியல்வாதியான வி.ஜே.மு. லொக்குபண்டார; தேசம் மீதான ஆர்வத்தை அவர் கைவிட்டதில்லை

- பிரதமர் மஹிந்த சபையில் இரங்கலுரை

முன்னாள் சபாநாயகர் அமரர் வி.ஜே.மு. லொக்குபண்டார, தேசாபிமான சிந்தனையுடனான ஒரு சுபீட்சமான நாட்டை உருவாக்குவதே நாம் அவரது சார்பாக இப்போது செய்யக்கூடிய மிகப் பெரிய கடமையாகுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (25) தெரிவித்தார்.

முன்னாள் சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டாரவின் மறைவு குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய இரங்கல் உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

வி.ஜே.மு. லொக்குபண்டார, அரசியல்வாதியாகவும் தேசம் மீதான ஆர்வத்தை கைவிடாத ஒரு சிறந்த மனிதர் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது,

அவர் அரசியலில் நுழைவதற்கு முன்பே, சிங்கள மொழி, கலாசாரம் மற்றும் மதம் ஆகியவற்றின் மீது ஆழமான பிணைப்பை கொண்டிருந்தார்.

அவர் இளம் வயதிலிருந்தே பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதினார் என்பது எங்களுக்குத் தெரியும். விவாதங்களில் ஈடுபட்டார். இவ்வாதங்கள் அப்போது நாட்டின் தேசிய பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன.

அது மாத்திரமன்றி வி.ஜே.மு. லொக்குபண்டாரவினால் தேசத்திற்கு பங்களித்த பல சிறந்த படைப்புகளும் உள்ளன.

1977ஆம் ஆண்டு ஹப்புதளை ஆசனத்தை வெற்றி கொண்டு ஐ.தே. க ஊடாக அரசியலுக்குள் நுழைந்த வி.ஜே.மு. லொக்குபண்டார, அரசியல்வாதியாகவும் தனது தேசம் மீதான ஆர்வத்தை கைவிடாத சிறந்த மனிதராவார்.

அமைச்சு பதவி கிடைக்கும்போது சிலர் மாறிவிடுவார்கள். எனினும், வி.ஜே.மு. லொக்குபண்டார அவ்வாறு மாறவில்லை.

விவாதங்களின் போது கூட அவர் மொழி மற்றும் இலக்கியம் தொடர்பான தனது அறிவை அரசியல் அரங்கிற்கு கொண்டு வந்தார்.

எதிர்ப்பாளர்களின் மனம் நோகாதபடி கருத்துக்களை எதிர்ப்பாளர்கள் மத்தியில் பரப்பும் ஒரு தனித்துவமான திறனைக் கொண்டிருந்தார். இதன் காரணமாக அவர் ஒரு திறமையான பேச்சாளராக மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டார்.

அரசாங்கத்தின் சுதேசிய மருத்துவம், கல்வி, கலாசாரம் மற்றும் செய்தி போன்ற துறைகள் வி.ஜே.மு. லொக்குபண்டாரவிடம் ஒப்படைக்கப்பட்டன.

அந்த ஒவ்வொரு அமைச்சகத்திலிருந்தும் மறக்க முடியாத ஒன்றை அவரால் நாட்டிற்காக அர்ப்பணிக்க முடிந்தது.

சிங்கள-தமிழ் புத்தாண்டின் போதான எண்ணெய் வைத்து நீராடும் சடங்கிற்கு அரச அனுசரணை வழங்கி, அச்சடங்கை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு அவர் பெரும் பங்களிப்பு செலுத்தியிருந்தார் என்பது எனக்கு நினைவிருக்கிறது.

நாம் சில வேளைகளில் வி.ஜே.மு. லொக்குபண்டார விடம் சில சொற்களுக்கு அர்த்தம் வினவியுள்ளமையும் எனக்கு நினைவிருக்கிறது.

அதன்போது சொல்லின் அர்த்தம் மாத்திரமன்றி அதன் பாலி, சமஸ்கிருத மற்றும் ஆங்கில சொற்களை கூட கற்பிக்கும் பெரும் ஆற்றலை அவர் கொண்டிருந்தார்.

உயரிய சபையான பாராளுமன்றத்தின் 16ஆவது சபாநாயகராக பதவி வகிக்கும் அளவிற்கு வி.ஜ.மு.லொக்குபண்டார அவர்கள் அதிஷ்டசாலியாக விளங்கினார்.

அன்று எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் சபாநாயர் பதவிக்கு நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் அப்பதவிக்கு கௌரவமளிக்கும் வகையில் செயற்பட்டார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிசாந்தன்

Fri, 02/26/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை