‘கொகா கோலா’ வருவாய் வீழ்ச்சி

பிரபல குளிர்பான நிறுவனமான கொகா கோலா, அதன் காலாண்டு வருமானத்தில் 5 வீதம் சுருக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கொகா கோலா நிறுவனம் இவ்வாறான ஒரு வீழ்ச்சியை சந்தித்திருப்பது இது முதல் முறை என்று கூறப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டில் கொகா கோலா 9.07 பில்லியன் டொலர் லாபம் ஈட்டியது.

கடந்த ஆண்டின் கடைசிக் காலாண்டில் அதைவிடக் குறைவாக அந்நிறுவனம் 8.61 பில்லியன் டொலர் லாபம் ஈட்டியது. அதற்கு அந்நிறுவனம் கொரோனா வைரஸ் சூழலால் நடப்புக்கு வந்துள்ள முடக்க நிலைகளைக் காரணம் காட்டியது. பொதுவாக உணவகங்கள், திரையரங்குகள், விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கொகா கோலா அதிகமான லாபம் ஈட்டுவது வழக்கம். ஆனால் முடக்கநிலை காரணமாக மூடப்பட்டுள்ள பல இடங்களில் குளிர்பான விற்பனை இடம்பெறாததால் நிறுவனத்தின் வருமானத்தில் சரிவு ஏற்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
 

Fri, 02/12/2021 - 16:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை