பொதுப் போக்குவரத்து சேவைக்கு முற்கொடுப்பனவு பரிவர்த்தனை அட்டை அறிமுகம்

இலங்கையில் பொதுப் போக்குவரத்து துறையில் நாணய அலகு கட்டண அறவீட்டு முறை நடைமுறையில் இருக்கிறது.

அதனால் ஏற்பட்டுள்ள சிரமங்களைத் தவிர்த்துக் கொள்ளும் நோக்கில் பொதுப் போக்குவரத்து பஸ் மற்றும் புகையிரதப் பாவனைக்காக முற்கொடுப்பனவு பரிவர்த்தனை அட்டையை அறிமுகம் செய்வதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்னர் திட்டமிடப்பட்டது. இதற்காக அனைத்து நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய செயற்பாட்டுக் குழுவொன்றை நியமிப்பதற்காக 2018 ஒக்ரோபரில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதியுடன் அதன் கீழுள்ள உள்ளூர் கம்பனியான லங்கா கிலியர் தனியார் நிறுவனம் முன்மொழியப்பட்டுள்ள முற்கொடுப்பனவு பரிவர்த்தனை அட்டை கருத்திட்ட யோசனை சமர்ப்பித்துள்ளது. குறித்த கருத்திட்ட யோசனையின் அடிப்படையில், போக்குவரத்துத் துறைக்கான முற்கொடுப்பனவு பரிவர்த்தனை அட்டையை நாடளாவிய ரீதியில் பயன்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Wed, 02/17/2021 - 16:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை