கொரோனா பரவும் கேந்திர நிலையமாக மேல் மாகாணம்

வைத்தியர் ஹரித்த அலுத்கே எச்சரிக்கை

மேல் மாகாணம் தொடர்ந்தும் கொரோனா நோயாளர்கள் பரவும் கேந்திரமாக உள்ளதென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்தார்.

இலங்கையில் கொவிட் பரவலுக்கும், சர்வதேச கொவிட்19 பரவலுக்குமிடையில் மூன்று மாத இடைவெளி காணப்படுகின்றது. சர்வதேச ரீதியில் இந்த மாத இறுதியில் தொற்று வீதம் குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், இலங்கையில் தொற்றின் அளவு எதிர்வரும் மே மாதத்திற்கு பின்னரே குறைவடையும் நிலை உள்ளது.

எனவே, சர்வதேச ரீதியில் நோயாளர் எண்ணிக்கை குறைவடைவதனால் இலங்கையிலும் அந்த எண்ணிக்கை உடனடியாக குறைவடையுமென எதிர்பார்க்க முடியாது.

தொடர்ந்து இரண்டு நாட்களாக ஆயிரத்தை அண்மிக்கும் அளவிலான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். மேல் மாகாணம் கொரோனா பரவல் கேந்திரமாகவே தொடந்தும் உள்ளமை தெளிவாக தெரிகின்றது.

சனத்தொகை அளவில் கணிப்பிடும்போது கடந்த மாதத்தில் ஒரு மில்லியன் மக்களில் 2,882 பேருக்கு தொற்று உறுதியானது. எனினும், இரண்டு வாரங்களில் அந்த எண்ணிக்கை 3,221 ஆக அதிகரித்துள்ளதாகவும் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்தார்.

Fri, 02/12/2021 - 07:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை