சேவையில் ஈடுபடாத பஸ்களின் அனுமதிப்பத்திரங்களை இரத்து

நாட்டில் நிலவிவரும் கொவிற் -19 நோய்த்தொற்று அசாதாரண சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பொதுமக்களின் அன்றாட பயணிகள் போக்குவரத்து சேவையை உரிய முறையில் வழங்காத தனியார் பஸ் வண்டிகளின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்து அவற்றை புதிய பஸ் உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைத் தலைவர் பிரசன்ன சஞ்சீவ தெரிவித்தார்.

தற்போது மேல் மாகாணத்தில் அதிகமான தனியார் பஸ் வண்டி உரிமையாளர்கள் தமது பஸ் வண்டிகளை காலையும் மாலையும் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போக்குவரத்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் பின்னரே வீதிப் பயணிகள் போக்குவரத்துத் சேவையில் பஸ்களை ஈடுபடுத்தி வருகின்றனர். இதன் காரணமாக மேல் மாகாணத்தில் தனியார் பஸ் சேவையை பயன்படுத்தி வரும் அநேகமான பயணிகள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

மேற்படி அசாதாரண நிலைமை தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்கள் பலமுறை அறிவுறுத்தப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் பலர் அதனை கருத்தில் கொள்வதாக தெரியவில்லை.

களுத்துறை சுழற்சி நிருபர்

Fri, 02/26/2021 - 17:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை