ஐரோப்பிய ஒன்றிய தடுப்பூசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்தை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அந்த அமைப்பு கட்டுப்பாடு விதித்திருப்பது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு கண்டனத்தை வெளியிட்டுள்ளது. தடுப்பூசி விநியோகத்தில் ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டுக்கு மத்தியிலேயே ஐரோப்பிய ஒன்றியம் இந்தக் கட்டுப்பாட்டை கொண்டுவந்துள்ளது.

இது ஒரு கவலை தரும் போக்காக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் துணைத் தலைவர் மரியங்கேலா சிமாவோ தெரிவித்துள்ளார். “தடுப்பூசியை தேசியமயமாக்குவது தொற்று நோயில் இருந்து மீண்டுவருவதை தாமதப்படுத்தும்” என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டொக்டர் அன்ட்ரஸ் அதனொம் கெப்ரியேசுஸ் எச்சரித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் மருந்து நிறுவனங்கள் செய்துகொண்டுள்ள ஒப்பந்த அளவுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்காவிட்டால், அந்த நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதை தடுக்க உறுப்பு நாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியம், கொரோனா தடுப்பூசித் திட்டத்தில் இஸ்ரேல், பிரிட்டன் போன்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கியுள்ளது.

Mon, 02/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை