ஊழியர்களின் பிள்ளைகளது வளமான எதிர்காலத்துக்கு பங்களிக்கும் லேக்ஹவுஸ்

- நிறுவனத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி டப்ளியூ. தயாரத்ன

பெற்றோர்கள் அனைவரின் எதிர்பார்ப்பு பிள்ளைகள் தங்களைவிட சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பதை காண்பதாகும் என லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணியுமான டப்ளியூ. தயாரத்ன தெரிவித்தார்.

லேக்ஹவுஸ் நிறுவன ஊழியர்களின் பிள்ளைகளுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதற்கு முன் நடந்த நிகழ்வுகளில் பெற்றோர்களுடன் பிள்ளைகளும் இவ்விழாவில் கலந்துகொண்டாலும் இம்முறை கொரோனா தொற்று காரணாக பெற்றோர்கள் மாத்திரமே இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அந் நிகழ்வில் தொடர்ந்துரையாற்றிய அவர்,...

இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பிள்ளைகளுக்காக பாடசாலை உபகரணங்களை வழங்கும் பாரிய பொறுப்பை இந்நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. ஏனென்றால் இந்நிறுவனத்தினூடாக கல்வி கற்றவர்களே இங்கு பணியாற்றுகிறார்கள். நீங்கள் கல்வி கற்றதன் பலனாகவே இந்நிறுவனத்தில் பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

எவ்வாறான கஷ்ட நிலை,துன்ப துயரங்கள் வந்தாலும் பொற்றோர்கள் விருப்பத்துடன் எதிர்கால நன்மைக்காக எழுத்தறிவை தம் பிள்ளைகளுக்கு வழங்குவார்கள் என்பது சிறுபராயத்தில் நான் அறிந்த உண்மைகளாகும். பெற்றோர்கள் எல்லா வகையிலும் முயற்சி செய்வது தம் பிள்ளைகளை சமூகத்தில் உயர்ந்த இடத்துக்கு கொண்டு வருவதற்காகும். அதற்கு ஏதேனும் ஒருவகையில் தமது வேலை தருநர்களிடமிருந்து உதவி கிடைக்குமா அது மிகவும் உயர்வானதாகும். கடந்த முறை எனக்கு ஞாபகம், இதை விட மிகவும் விமர்சையாக இவ்விழா நடைபெற்றது. பிள்ளைகளை அழைத்து வந்து மிக விமர்சையாக நடத்தினோம். ஆனால் இம்முறை நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை நாம் அறிவோம். ஆனால் என்ன பிரச்சினைகள் இருந்தாலும் எமது ஊழியர்களின் பிரச்சினையைத் தீர்க்க எல்லா பிள்ளைகளுககும் பாடசாலை உபகரணங்கள் மாத்திரமல்ல பாடசாலைக்கான காலணி பேக் என்பவற்றை வாங்கவும் வவுச்சர்களை வழங்கினோம். அதனால் மகிழ்ச்சியடைகின்றேன்.

இவ்விடயம் பல காரணங்களால் கால தாமதமானாலும் எமது பிள்ளைகளின் கல்விக்காக நான் இந்நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவரின் மரண வீட்டுக்கு சென்ற போது அவரின் இரண்டு பிள்ளைகள் இந்நிறுவனத்தால் வழங்கப்பட்ட போனஸ் பணம் மற்றும் பாடசாலை உபகரணங்கள் மூலமே நாம் கல்வி கற்றோம் என கூறினார்கள். இதன்மூலம் தெரிய வருவதாவது,... நீண்டகாலமாக செயற்படுத்தப்பட்டுவரும் புண்ணிய நிகழ்வாக இதனைக் கருதலாம்.அதனால் நாம் இன்றும் அதனை மேற்கொண்டுள்ளோம். இதையும் விட மிகவும் சிறப்பாக எதிகாலத்தில் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். இவற்றினை பயன்படுத்தி நன்றாகக் கல்வி கற்று வளமான எதிர்காலம் கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கின்றேன் என்றார்.

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் சந்தன பண்டார,.....

நாம் இருபது வருட காலமாக நிறுவன ஊழியர்களின் பிள்ளைகளுக்காக பாடசாலை உபகரணங்களை வழங்கி வருகின்றோம்.ஆனால் இம்முறை நாட்டில் தற்போதுள்ள நிலைமை காரணமாக மாணவர்களின் பங்களிப்பில்லாமல் மிகவும் எளிமையாக இந்நிகழ்வை நடத்தினோம்.

விசேடமாக பெற்றோர்கள் குழுவொன்றை அமைத்து அவர்களின் பரிந்துரைகளுக்கு அமைய தேவையான பாடசாலை கற்றல் நடவடிக்கைகளுக்கான உபகரணங்களை வழங்கினோம்.

அதற்கு காரணம் பல சந்தர்ப்பங்களில் அவசியமில்லாத பொருட்கள் வழங்கப்பட்டிருந்தன. அவற்றை ஆராய்ந்த பின்னர் சிறந்த தரமான அட்லஸ் வகை கொப்பி புத்தகங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதற்காக மேலதிகமாக பத்து இலட்சம் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றார்கள். அதனால் நாம் அவர்களுக்கு பலமாக அமைய தரமானவற்றை முறையாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

இந் நிகழ்வில் லேக்ஹவுஸ் நிறுவன ஆசிரியர் பீடப் பணிப்பாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் தர்மசிறி காரியவசம், செயற்பாட்டுப் பணிப்பாளர் சட்டத்தரணி கனிஷ்க விதாரண, பணிப்பாளர் சட்டம் மற்றும் நிர்வாகம் சட்டத்தரணி ரகித்த அபேகுணவர்தன, பணிப்பாளர் நிதி சட்டத்தரணி ஜனக ரணதுங்க, பதில் பொது முகாமையாளர் சுமித் கொத்தலாவல, பிரதி பொது முகாமையாளர் விராஜித் பொயிஸ் உள்ளிட்ட அதிகாரிகளும், நிறுவன ஊழியர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தமிழில் வி. ஆர். வயலட்

Wed, 02/03/2021 - 11:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை