களுகங்கை இரத்தினக்கல் அகழ்வு உடனடியாக இடைநிறுத்தம்

- இரத்தினபுரி மாவட்ட இணைப்பு குழுக் கூட்டத்தில் தீர்மானம்

களுகங்கை ஹெரனியாவத்தை பிரதேசத்தில் இரத்தினக்கல் அகழ்வுக்காக வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டுமென நேற்று முன்தினம் நடைபெற்ற இரத்தினபுரி மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

களுகங்கையில் மேற்படி இரத்தினக்கல் அகழ்வுக்காக வழங்கப்பட்டுள்ள இரத்தினக்கல் அகழ்வு முயற்சி தொடர்பாக பிரதேச மக்களிடமிருந்து கிடைக்க பெற்றுள்ள முறைப்பாடுகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்ட போதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இணைப்பு குழு கூட்டத்தின் துணை தலைவர் அகில சாலிய எல்லாவள, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர்களான காமினி வலேபொட வருண லியனகே ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ்விவகாரம் தொடர்பில் கண்டித்து உரையாற்றினர்.

1 கோடி 35 ரூபாய்களை பெற்றுக்கொண்டு இரத்தினக்கல் அதிகார சபை இவ் விடயத்தில் ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்களுக்கு பொது மக்கள் மத்தியில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் விதத்தில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இங்கு உரையாற்றிய பலரும் குற்றஞ்சாட்டினர்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

Fri, 02/19/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை