ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவாக பேரணி

ரஷ்யாவில் தடுப்புக்காவலில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னிக்கு ஆதரவாக பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததை அடுத்து தலைநகர் மொஸ்கோவின் சுரங்க ரயில் சேவை மூடப்பட்டு பயணக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

நகர மையத்தில் இருக்கும் பல உணவகங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டிருப்பதோடு போக்குவரத்துகளும் திசைதிருப்பப்பட்டுள்ளன. ரஷ்யாவெங்கும் கடந்த வாரம் இடம்பெற்ற பேரணிகளில் 4,000க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

விச இரசாயனம் செலுத்தப்பட்டு நவல்னியை படுகொலை செய்யும் முயற்சியில் இருந்து மீண்டு வந்த அவர் ரஷ்யா திரும்பிய நிலையில் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையின் நிபந்தனைகளை மீறியதற்காகவே கடந்த ஜனவரி 17 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார். பெர்லினில் சிகிச்சை பெற்ற நிலையிலேயே அவர் நாடு திரும்பி இருந்தார். ஒன்றுகூடல்களுக்கு எதிராக பொலிஸார் விடுத்த எச்சரிக்கையையும் மீறி கிழக்கு ரஷ்யாவில் நவல்னிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

Mon, 02/01/2021 - 08:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை