கொழும்பில் சட்டவிரோத கட்டடங்கள் உடைப்பு
கொழும்பில் சட்டவிரோத கட்டடங்களை உடைப்பதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பு 11 ' செட்டியார் தெரு ' கபொஸ் ஒழுங்கையிலுள்ள வர்த்தக நிலையங்கள் திடீரென உடைக்கப்பட்டு வருகின்றன.
சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களை பெக்கோ இயந்திரத்தின் மூலம் உடைக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.
இதனையடுத்து அந்தப் பகுதியிலுள்ள வர்த்தகர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையினால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பிந்திய தகவலின்படி வர்த்தகர்களின் எதிர்ப்பை அடுத்து, வர்த்தக நிலையங்களை உடைக்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.குறித்த பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களின் முன்பகுதி ஒன்றரை மீற்றர் அளவிற்கு உடைக்கப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபை ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனை வர்த்தகர்கள் ஏற்றுக்கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.
எனினும், நேற்றைய தினம் வருகைத் தந்த அதிகாரிகள், வர்த்தக நிலையங்களை முழுமையாக உடைக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
from tkn
Post a Comment