பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

கொவிட்-19 காரணமாக பல பாதிப்புகளை சமூகம் எதிர்கொண்டு வருகின்ற நிலையில், பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களும் தற்போது அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக கேப்ஸ்சோ நிறுவனம் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் மற்றும் நீதிமன்ற செயற்பாடுகள் தொடர்பில், கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு நேற்றுமுன்தினம்  (22) நடைபெற்றது.

கல்முனை பிரதேச செயலக நிர்வாக கிராம உத்தியோகத்தர் யூ.எல்.பதுயுத்தீன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்,

பிரதான வளவாளராக சட்டத்தரணி சுதர்சினி மனோகரன் கலந்து கொண்டு விளக்கமளித்தார்.

இதன் போது கொவிட்-19 கொரோனா தொற்றுநோயின் பாதிப்பு, வீட்டு வன்முறை, வீட்டு வன்முறை ஏற்படுவதற்கான காரணங்கள், 2005ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், சிறுவர்களுக்கு ஏற்படும் வன்முறைகளை எவ்வாறு கையாள்வது, வன்முறையின்போது அரச உத்தியோகத்தர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பன போன்ற பல விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டன. இதன்போது பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எல்.எப்.சிபாயா உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பெரியநீலாவணை விசேட நிருபர்

 

 

Wed, 02/24/2021 - 14:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை