இஸ்ரேலிய படையினரால் பலஸ்தீனர் சுட்டுக்கொலை

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் கஷ் எட்சியோன் பகுதியில் கத்திக்குத்து தாக்குதலுக்கு முயன்றதாகக் கூறி பலஸ்தீனர் ஒருவர் இஸ்ரேலிய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இஸ்ரேலிய இராணுவத்தின் பாதுகாப்புடன் உள்ள பஸ் தரிப்பிடம் ஒன்றில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மூன்று கத்திகள் கட்டப்பட்ட தடி ஒன்றை ஏந்திய சந்தேக நபர் பாதுகாப்பு படையினரை நோக்கி ஓடி வந்ததாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்த சம்பவத்தில் எந்த இராணுவ வீரருக்கு காயம் ஏற்படவில்லை என்று அது குறிப்பிட்டுள்ளது. பெத்லஹாமுக்கு அருகில் இருக்கும் கஷ் எட்சியோன் பகுதியில் பல இஸ்ரேலிய குடியேற்றங்களும் அமைந்துள்ளன. இங்கு தனிப்பட்ட பலஸ்தீனர்களின் தாக்குதல்கள் அடிக்கடி நிகழ்வதாகக் கூறப்படுகிறது.

1967 ஆம் ஆண்டு ஆறு நாள் போரின்போதே மேற்குக் கரையை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.

தற்போது மேற்குக் கரையில் சுமார் 2.8 மில்லியன் பலஸ்தீனர்களுடன் சுமார் 475,000 யூதக் குடியேற்றவாசிகள் வாழ்ந்து வருகின்றனர். இந்தக் குடியேற்றங்கள் சர்வதேச சமூகத்தால் சட்டவிரோதம் என்று கருதப்படுகிறது.

Mon, 02/01/2021 - 12:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை