நாட்டு மக்கள், ஜனாதிபதி, பிரதமருக்கு சர்வமதத் தலைவர்கள் ஆசிர்வாதம்

சுதந்திர தினத்தில் மும்மணிகளின் ஆசியுடன் பிரார்த்தனை

73 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இலங்கை திருநாட்டின் அனைத்து இன, மத, மொழி பேசும் மக்களுக்கும் அவர்களை வழி நடத்துகின்ற நாட்டின் தலைவர்களான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ உட்பட சகல அரசியல் தலைவர்களுக்கும் மும்மணிகளின் ஆசிகள் முழுமையாக கிடைக்க வேண்டும் என்று சர்வ மதத் தலைவர்கள் தமது பூரண ஆசிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து மிகவும் சிறப்பாகவும் விமரிசையாகவும் கொண்டாடப்படும் சுதந்திர தின விழாவானது இம்முறை கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மிகவும் எளிமையாக ஆனால் சகல சம்பிரதாயங்களுடன் கொண்டாடப்படுகின்றது.

இன்றைய இந்த பொன்னான நன்னாளில் சகல இன, மத, மொழி மக்களும் ஒற்றுமையாகவும் பேதங்களை மறந்து சகோதரத்துவத்துடன் வாழ்வோம் என்று உறுதிபூண்டு எமது எதிர்கால நல்வாழ்வை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதுவரை காலமும் ஏதாவது அத்தகைய மனக்கசப்புகள் சிறுசிறு சஞ்சலங்கள் இருந்தாலும் அவற்றை இன்றுடன் இல்லாதொழித்து இனிவரும் காலத்தில் புதிய வாழ்விலே ஆரம்பிப்போம் என உறுதி பூண்டு இன்றைய நாளை அனைவரும் இணைந்து கொண்டாடுவோம் என சர்வமதத்தலைவர்கள் ஆன புத்தசாசன மத விவகார கலாசார அமைச்சின் இணைப்பாளர்களான வணக்கத்துக்குரிய கலாநிதி அனுராக் காசா நாயக்க தேரர், கலாநிதி சிவஸ்ரீ பாபு சர்மா ராமச்சந்திர குருக்கள், கலாநிதி ஹஸன் மௌலானா, வண பிதா கலாநிதி குருகுல ஆராய்ச்சி ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

 

 

Thu, 02/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை