‘சிலுமின’ வணிக பகுதி ஆசிரியரான இனோக்கா பெரேராவுக்கு தங்க விருது

2020 தொழில்புரியும் பெண்களுக்கான விருது விழா

வணிகத்துறை உட்பட மேலும் பல தொழிற்துறைகளில் பல தொழில்புரியும் பெண்களை கௌரவிக்கும் நோக்கில் பெண்கள் முகாமைத்துவ நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் Top -10 Professinoal and Carrer Woman Awards SriLanka- 2020 பணிபுரியும் பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் சிலுமின பத்திரிகையின் வணிக பகுதி ஆசிரியரான இனோக்கா பெரேரா பண்டார தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இவ்விழா அண்மையில் கொழும்பு சங்கிரில்லா ஹோட்டலில் நடைபெற்றதுடன் அச்சு ஊடக பிரிவில் வெற்றிகரமான தொழில்துறைக்கான விருதினை அவர் பெற்றுள்ளார்.

உலக வங்கி குழும அங்கத்துவ, சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் மற்றும் அதனூடாகச் செயற்படும் Woman In Work நிகழ்ச்சித்திட்டம் அவுஸ்திரேலிய அரசுடன் இணைந்து இவ்விருது வழங்கும் விழாவினை ஏற்பாடு செய்திருந்தது.

1996ம் ஆண்டு தருணி பத்திரிகையின் சுதந்திர ஊடகவியலாளராக பத்திரிகைத்துறை வாழ்க்கையை ஆரம்பித்து இலங்கையின் பாரிய பத்திரிகை நிறுவனத்தின் சிலுமின பத்திரிகையின் வணித்துறை ஆசிரியர் வரை அவர் பயணித்த பாதையில், தருணி மற்றும் சிலுமின பத்திரிகை மூலம் சமூகத்துக்கு, வர்த்தக சமூகத்துக்கு மற்றும் பத்திரிகைக்கு அளித்த பங்களிப்புகள் இந்த தங்க விருதுக்கான மதிப்புக்கும் செயல்திறனுக்கும் உட்படுத்தப்பட்டது.

2004ம் ஆண்டு சிலுமின ‘ரஸதுன’ மேலதிக இணைப்புக்காக சிறந்த விசேட கட்டுரையாளருக்கான உபாலி விஜயவர்தன விருது உள்ளிட்ட மூன்று ஊடக விருதுகளைப் பெற்றுள்ள இனோக்கா தெஹிவளை புனித பவுல் கன்னியர்மட பழைய மாணவியுமாவார்.

Wed, 02/10/2021 - 08:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை