கினியாவில் எபோலா நெருக்கடி

கினியா நாட்டின் தென் பகுதியில் எபோலா தொற்றினால் மூவர் உயிரிழந்து மேலும் நால்வர் சுகவீனமுற்றிருப்பதால் அந்நாட்டில் இந்த நோய்த் தொற்று நெருக்கடி பற்றிய பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் லைபீரிய எல்லைக்கு அருகில் இறுதிச் சடங்கு ஒன்றில் கலந்து கொண்ட ஏழு பேரிடம் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் இரத்தப்போக்கு போன்ற நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் சிகிச்சை நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

“முகம்கொடுத்திருக்கும் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டும் சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைக்கு அமையவும் கினிய அரசு எபோலா தொற்று பற்றிய பிரகடனத்தை வெளியிடுகிறது” என்று அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு பின்னரே கினியாவில் மீண்டும் எபோலா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக 2013 தொடக்கம் 2016 வரை இந்தத் தொற்றினால் கினியா, லைபீரியா மற்றும் சியாரலியோன் முதற்கொண்டு பிராந்தியத்தில் 11,300 பேர் வரை உயிரிழந்தனர்.

Tue, 02/16/2021 - 13:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை