ரயில் நிலைய அதிபர்கள் சட்டப்படி வேலை
- 48 மணி நேர அடையாள போராட்டம்
ரயில் நிலைய அதிபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 48 மணித்தியால சட்டப்படி வேலை போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
அதற்கிணங்க அவர்கள் நேற்று நள்ளிரவில் இருந்து கண்காணிப்பு நடவடிக்கையில் இருந்து விலகிக் கொண்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
மேற்படி சட்டப்படி வேலை நடவடிக்கை காரணமாக அலுவலக ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே வேளை விரைவாக இதற்கு தீர்வு பெற்றுத் தரப்படுமானால் சட்டப்படி வேலை நடவடிக்கையை கைவிட தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெற்றிடங்களை நிரப்பாமை, நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தாமை, ரயில் நிலையங்களில் நவீன தொடர்பாடல் தொகுதியை அறிமுகப்படுத்தாமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே மேற்படி தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு மேற்படி தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொள்வதாக தெரிவித்துள்ள அவர், அதற்கு உடனடி தீர்வு கிடைக்காதவிடத்து தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.(ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்
from tkn
Post a Comment