களனிவெலி பாதையில் புதிய அலுவலக ரயில் சேவை நேற்று முதல் ஆரம்பம்

களனிவெலி ரயில் பாதையில் நேற்று முதல் புதிய அலுவலக ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது சேவையிலுள்ள ரயிலுக்கு மேலதிகமாக மேலும் ஒரு ரயில் சேவை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

ஹோமாகம ரயில் நிலையத்திலிருந்து காலை ஏழு மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் மேற்படி ரயில் மாலை 6.10 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து ஹோமாகம நோக்கிப் புறப்படவுள்ளது. ஹோமாகமவிலிருந்து பயணிக்கும் மேற்படி ரயில் 05 பிரயாணிகள் பெட்டிகளைக் கொண்டது. காலை 07 மணிக்கு ஹோமாகம ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் பயணத்தை ஆரம்பிக்க உள்ளது. (ஸ)
 

Sat, 02/06/2021 - 09:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை