பிரதமரின் அறிவிப்பு; மத உரிமைகளுக்கான ஆக்கபூர்வ முன்னெடுப்பு

கொவிட்-19 தொற்று காரணமாக மரணிப்பவர்களின் சடலங்கனை அடக்கம் செய்வதற்கு இலங்கை எடுத்துள்ள தீர்மானத்தை அமெரிக்கா வரவேற்றுள்ளது. மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் சாதகமானதொரு நடவடிக்கையாகுமென்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படுமென்று நேற்று (10) பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ பாராளுமன்றத்தில் அறிவித்ததையடுத்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் கட்டாய தகனத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பிரதமர் அறிவிப்பை வரவேற்கிறோம். சர்வதேச பொதுச் சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்பவும், மத சடங்குகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது ஒரு சாதகமான நடவடிக்கையாகும் என தெரிவித்தார்.

Thu, 02/11/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை