கிறிஸ்தவர்களின் தவக்காலம் திருநீற்றுப் புதனுடன் இன்று ஆரம்பம்

கிறிஸ்தவ மக்கள் அனுஷ்டிக்கும் தவக்காலம் இன்று திருநீற்றுப் புதனுடன் ஆரம்பமாகிறது.

இயேசு கிறிஸ்துவின் பாடுகளை தியானிக்கும் வகையில் 40 நாட்கள் இந்த தவக்காலம் அனுஷ்டிக்கப்படுவதுடன் இன்றைய தினம் திருநீற்றுப்புதன் விசேட திருப்பலிகள் அனைத்து ஆலயங்களிலும் நடைபெறுகின்றன. உலகளாவிய கிறிஸ்தவர்கள் நோன்பு, செப, தப வழிபாடுகள் மற்றும் சிலுவைப்பாதை திருயாத்திரைகள் மூலம் இக்காலங்களை அனுஷ்டிக்கின்றனர். இக்காலங்களில் விசேட திருப்பலி பூசைகள் மற்றும் வழிபாடுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

 

 

Wed, 02/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை