Header Ads

BIMSTEC புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்ற அமைச்சரவை அனுமதி

வங்காள விரிகுடா வலயத்தில் ஒத்துழைப்புக்களை மேலும் விருத்தி செய்வதற்கான கூட்டணியாக 1997 ஆம் ஆண்டு பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார கூட்டுறவு முயற்சிகளுக்கான வங்காள விரிகுடா வலய நாடுகளின் அமைப்பு (BIMSTEC) ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது இலங்கை உள்ளிட்ட 07 நாடுகள் அங்கத்துவ நாடுகளாக செயற்பட்டு வருகின்றன. இந்த அங்கத்துவ நாடுகளால் இராஜதந்திர கற்கைகள்,பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்களுக்கிடையே பரஸ்பர ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, இவ்வருடத்தின் முதல் அரையாண்டில் இலங்கையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள 05 ஆவது பிம்ஸ்டெக் மாநாட்டில் முன்மொழியப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Wed, 02/03/2021 - 11:28


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.