மேலும் 8 மரணங்கள்; இதுவரை 351 கொரோனா மரணங்கள் பதிவு

மேலும் 8 மரணங்கள்; இதுவரை 351 கொரோனா மரணங்கள் பதிவு-8 More COVID19 Deaths Reported-Total Deaths in SL Increased Up To 351

- 4 ஆண்கள், 4 பெண்கள்
- வயதுகள்: 77, 73, 56, 83, 85, 82, 76, 48
- இடங்கள்: கொச்சிக்கடை, கடவத்த, மொரட்டுவை, களனி, கொழும்பு 14, கொழும்பு 13, மஹரகம, முந்தளம்

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 8 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது (06) அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்கனவே 343 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 8 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 351 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் இருவர் இன்றும் (06) நால்வர் நேற்றும் (05), இருவர் நேற்று முன்தினமும் (04) மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sat, 02/06/2021 - 22:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை