Header Ads

கொங்கோவில் படகு மூழ்கி 60 பேர் பலி: பலரும் மாயம்

கொங்கோ நாட்டில் படகு ஒன்று கவிழ்ந்து குறைந்தது 60 பேர் மூழ்கி பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 300 பேர் மீட்கப்பட்டபோதும் மேலும் 200 பேர் காணாமல்போயிருப்பதாக கூறப்பட்டுள்ளது. தலைநகர் கிசாசாவின் கிழக்காக இரவு நேரத்தில் பயணம் செய்த இந்தப் படகு பாறை ஒன்றில் மோதி இருப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இரவு நேரத்தில் படகு பயணத்திற்கு உள்ள தடையை மீறி இந்த பயணம் இடம்பெற்றுள்ளது.

மோசமான பாதைகள் காரணமாக கொங்கோவில் பலரும் நீண்ட தூர பயணங்களை படகிலேயே மேற்கொள்கின்றனர்.

சட்டத்தை மீறி இரவு நேரத்தில் அதிகம்பேரை ஏற்றியபடி பயணித்ததே இந்த விபத்துக்குக் காரணம் என்று கொங்கோ மனிதாபிமான அமைச்சர் ஸ்டீவ் ம்பிக்காயி தெரிவித்துள்ளார்.

தலைநகர் கிங்காசாவில் இருந்து சுமார் 700 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் ம்பன்டாக்கா நகரை நோக்கி இந்த படகு பயணித்துள்ளது. இதன்போது லொன்கோலா எகோடி என்ற நகருக்கு அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உள்ளூர் நேரப்படி இரவு எட்டு மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றிருப்பதோடு நதியில் சடலங்கள் மிதப்பதாக உள்ளூர் மக்கள் கூறியதாக மாகாண ஆளுநரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Thu, 02/18/2021 - 10:44


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.