ஆப்கானில் பாரிய தீ: 500 வாகனம் அழிவு

ஈரான் நாட்டு எல்லையை ஒட்டிய ஆப்கானிஸ்தான் சுங்கச்சாவடி ஒன்றில் நூற்றுக்கணக்கான எரிபொருள் வாகனங்கள் வெடித்து ஏற்பட்ட பாரிய தீயில் குறைந்தது 60 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனால் எரிபொருள் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டிருப்பதோடு பல மில்லியன் டொலர் சேதங்கள் இடம்பெற்றுள்ளன.

ஈரான் நிர்வாகம் எல்லை பகுதிக்கு தீயணைப்பு படையினர் மற்றும் அம்புலன்ஸ்களை அனுப்பி இருப்பதோடு எல்லை நகரான இஸ்லாம் குவாலாவில் ஏற்பட்டிருக்கும் இந்தத் தீயை உள்ளூர் மக்கள் கடுமையாகப் போராடி கட்டுப்படுத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில் எரிவாயு டாங்கர் ஒன்று வெடித்ததை அடுத்தே இந்தத் தீ பரவி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்தில் கரும்புகை வானைச் சூழ்ந்திருக்கும் காட்சி தொலைக்காட்சியில் வெளியாகியுள்ளது. இதில் சுமார் 500 வாகனங்கள் கருகி இருப்பதாக ஈரானின் இர்னா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதில் 300க்கும் அதினமாக வாகனங்கள் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோலை ஏற்றிவந்தவை என்று கூறப்பட்டுள்ளது.

Mon, 02/15/2021 - 10:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை